பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதி

Read Time:2 Minute, 23 Second

6a29a5e6-1c55-48a1-8e3c-b16fe6a27a4a_S_secvpfநடிகையுடன் தொடர்பு என வெளியான தகவலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்காங் ஹோலந்து (59) பதவி வகித்து வருகிறார். இவருககு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து பெற்றுள்ளார். 4 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவர் வாலெரி ட்ரீயர்வெய்லர் (48) என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அதிபர் ஹோலந்தின் காதலியான இவரும் 2 தடவை விவாகரத்து ஆனவர். இவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். பத்திரிகையாளராக இருக்கிறார்.

அதிபர் ஹோலந்துடன் சேர்ந்து வாழ்வதால் பிரான்சின் முதல் பெண் என்ற அந்தஸ்து பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகை ஜூலி கெயட்டுடன் ஹோலந்துக்கு தொடர்பு என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இத்தகவலுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத ஹோலந்து இந்த செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

இந்த பரபரப்பு செய்தி வெளியான நிலையில் அதிபர் ஹோலந்தின் காதலி வாலெரி ட்ரியர்வெய்லர் பாரீசில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை வாலெரியின் உதவியாளர் தெரிவித்தார்.

ஆனால் அவர் ஏன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இவருக்கு பல பரிசோதனைகள் நடந்ததாகவும், அதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அவர் இன்று வீடு திரும்புகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி
Next post சர்வதேச பொலிஸார் தேடும், “புலிகள்” இயக்க கிளிநொச்சி தமிழர், பிரான்ஸில் கைது!!