நாட்டில் மீண்டும் சீரற்ற வானிலை; 45 வீடுகள் நீரில் மூழ்கின

Read Time:2 Minute, 35 Second

wet.vellam-01அதிக மழையுடனான வானிலையால் சில மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை பொலன்னறுவை, மற்றும் அனுராதபுரம் உட்பட சில மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளத்தினால் தொப்பிகல காட்டுப்பகுதியில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கும் சிலரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவிக்கின்றார்.

பராக்கிரம சமுத்திரம் மற்றும் உருகாமம் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெள்ளத்தினால் பொலன்னறுவை மாவட்டத்தில் 45 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி கூறியுள்ளார்.

கிழக்கு பிராந்தியத்தில் காணப்படுகின்ற மழை பாங்கான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடனான மழை ஆங்காங்கே பெய்யுமென திணைக்களத்தின் வானிலை தொடர்பாடல் அதிகாரி லக்ஷ்மி லத்தீவ் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைமலையில் பஸ் விபத்து
Next post 52 மீனவர்கள் இலங்கை வருகை