புதைக்குழி பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது: இராணுவ தளபதி

Read Time:1 Minute, 49 Second

mandaioduஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா கமமே மன்னார் புதைக்குழி தொடர்பில் தகவல் தருகையில், புதைக்குழி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்ற வகையில் இராணுவத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டார்.

மன்னாரில் புதைக்குழி தொடர்பில் இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் இராணுவ தளபதி நிராகரித்துள்ளார்.

இந்தநிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன.

மனித புதைகுழி தொடர்பாக அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன கருத்து தெரிவிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் அதன் மரணம் சம்பவித்த விதத்தினை அறிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும்.

குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எழும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன. பாரியளவிலான தடயப் பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மாவின் கிரீன் சிக்னல் கிடைக்குமா? மாஜி அமைச்சர் தவமாய் தவமிருக்கிறார்!
Next post மிஷெல் ஒபாமாவின் பிறந்த தின விழாவில் பியோன்ஸேயின் இசை நிகழ்ச்சி