உடன்பிறந்த தங்கையுடன், குடும்பம் நடத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்

Read Time:2 Minute, 51 Second

quest-man215 வருடங்களுக்குப் பின்னர் சந்தித்த தனது ஒரே அழகிய தங்கையுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அவளுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரான, சகோதரனை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.என்.பீ.அமரசிங்க உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு கிம்புலா­பிட்டிய இத்தொடல்ல வீதியைச் சேர்ந்த ஜே.லஹிரு என்பவராவார்.

இந்த சகோதரனதும், தங்கையினதும் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

இதில் சகோதரி சிறுவயதிலேயே தந்தையுடன் நிக்கவரெட்டிய பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சகோதரர் தாயுடன் கிம்புலாபிட்டிய பகுதியிலேயே வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் சந்தேக நபரின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளார். இந்த சகோதர சகோதரியின் பெற்றோர் 15 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

தமது சகோதரனைப் பார்க்க விரும்பிய இந்த அழகிய சகோதரி 15 வருடங்களின் பின்னர் சகோதரனைத் தேடி வந்துள்ளார்.

இங்கு சகோதரர் சகோதரியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திரமாக காதல் சுகம் அனுபவித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த தாய் நாடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய தாய், மகனினதும் மகளினதும் நடத்தையில் சந்தேகம் கொண்டு இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருந்துள்ளார்.

பின்னர் மகனும் மகளும் ஒன்றாக இருப்பதைக் கண்ட தாய் இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் பலி, 30 பேர் மாயம்
Next post மண்டேலாவின் சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்