பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்

Read Time:2 Minute, 47 Second

004cபத்மபூஷண் பட்டத்துக்கு இனிமேல்தான் தகுதி உள்ளவனாக நான் ஆக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:

பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில் இடம் பெற்றதை எனக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி. தேர்வாளர்களுக்கு நன்றி.

இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது. நன்றி இந்தியாவிற்கு. நன்றி அன்பிற்கு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு: 1954-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன், தமிழ்த் திரையுலகில் 1960-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

சிறந்த பிற மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்த பெருமையைப் பெற்றவர் கமல்ஹாசன்.

நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.

இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக ஏற்கெனவே இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய நடிகர்களில் மிகச்சிலரில் ஒருவராக கமல் உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் காதலிக்கும் வல்லவன் கூட்டணி!
Next post (VIDEO) ஷெர்லின் சோப்ரா நடித்த, படு ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வெளியீடு!