ஆர்னோல்ட்டின் புதிய காதலி

Read Time:2 Minute, 7 Second

3948Untitled-1ஹொலிவூட்டின் சிரேஷ்ட நடிகர்களில் ஒருவரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் உடற்கூற்று மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

66 வயதான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். கென்னடி குடும்பத்தைச் சேர்ந்த மரியா ஷ்ரீவரும் ஆர்னோல்ட்டும் திருமணம் செய்து 25 வருடகாலம் இணைந்தனர்.

இரு வருடங்களுக்கு முன் இவர்கள் பிரிந்தனர். இத்தம்பதியின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய ஒருவர் மூலம் குழந்தையொன்றுக்கு ஆர்னோல்ட் தந்தையானமை அம்பலமாகியமை இப்பிரிவுக்கு காரணமாகியது.

இந்நிலையில் உடற்கூற்று மருத்துவரான ஹீதர் மிலிகன் என்பவரை ஆர்னோல்ட் காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் கடந்த வருட முற்பகுதியிலும் ஒன்றாக காணப்பட்டனர். ஆனால், அதன்பின் தான் முன்னாள் மனைவி மரீயா ஷ்ரீவரை இன்னும் நேசிப்பதாக ஆர்னோல்ட் கூறியிருந்தார்.

இதனால் ஆர்னோல்ட்டும் மரியாவும் மீண்டும் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சில தினங்களுக்குமுன் ஹீதர் மிலிகனுடன் ஆர்னோல்ட் மீண்டும் ஜோடியாக காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஆர்னோல்ட்டின் வீட்டிலிருந்து காரொன்றில் பயணம் செய்யும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை வித்தியா பாலன் (அவ்வப்போது கிளாமர்)
Next post திருமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்