17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை
அபன்பொல – காசிகோடே பிரதேசத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அபன்பொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.