உலகக் கோப்பை : உக்ரைன், ஸ்பெயின் வெற்றி!

Read Time:2 Minute, 12 Second

spain.Flag.jpgஸ்பெயின் அணியிடம் 4 கோல்கள் வாங்கி படுதோல்வியுற்ற உக்ரைன் அணி, நேற்று நடந்த போட்டியில், மிக அருமையாக விளையாடி 4 கோல்கள் போட்டு சௌதி அரேபியாவை வென்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள உக்ரைன் அணியும், சௌதி அரேபியாவும் மோதிய போட்டியில் துவக்கத்தில் இருந்தே உக்ரைன் அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்டம் துவங்கிய 4வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி உக்ரைன் அணி முதல் கோலை போட்டது. அதனைத் தொடர்ந்து எதிரணிக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் உக்ரைன் அணி ஆடிய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.

ஆட்டத்தின் இறுதிப் பகுதி வரை மேலும் 3 கோல்கள் அடித்த உக்ரைன் அணி, 3 புள்ளிகளுடன் எச் பிரிவில் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஸ்பெயின் 2வது சுற்றுக்குத் தகுதி!

நேற்று நடந்த மற்றொரு எச் பிரிவு போட்டியில், ஆப்ரிக்க அணியான டுனுசியாவுடன் ஸ்பெயின் மோதியது. ஆட்டம் துவங்கிய 9வது நிமிடத்திலேயே டுனிசியா அணி 1 கோலை போட்டு முன்னிலைக்கு வந்தது. அதற்கு பதிலடி கொடுக்க ஸ்பெயின் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் மிக ஆவேசமாக ஆடிய ஸ்பெயின் அணி, 3 கோல்களைப் போட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்ற ஸ்பெயின் அணி, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை தமிழர் பிரச்சினை- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
Next post மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி!