தனது முதல் பெயரை ‘செக்ஸி’ என மாற்றிய பெண்!
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் ஒருவர் தனது பெயருக்கு முன்னால் செக்ஸி என்ற வார்த்தையை சேர்க்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ஒஹியோ என்ற பகுதியை சேர்ந்த ரானே கெரப்ரீ என்ற பெண்ணிற்கு, தனது முதல் பெயரான ரானே என்ற வார்த்தை சுத்தமாக பிடிக்கவில்லை.
ரானே என்று யாராவது கூப்பிட்டால் அவர் பயங்கரமாக கோபம் கொள்வார். எனவே தன்னுடைய முதல் பெயரை மாற்ற அவர் முடிவு செய்தார்.
அவருடைய கணவர், அவரை ‘நீ மிகவும் செக்ஸியாக இருக்கிறார்ய்’ என அடிக்கடி கூறியதால் அவருக்கு அந்த செக்ஸி என்ற வார்த்தை மீது அலாதி பிரியம் ஏற்படது. அவர் அணியும் உடைகளில் கூட செக்ஸி என்ற வார்த்தை இருக்கும்.
இந்நிலையில் தனது முதல் பெயரை செக்ஸி என மாற்றுவதற்கு அவர் சட்டப்பட்டி முயற்சி செய்தார். ஒஹியோ நீதிமன்றத்தில் 87 டொலர் பணம் செலுத்தி தனது பெயரை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு நீதிபதி அவரிடம் உண்மையிலேயே அந்த பெயருக்குத்தான் நீங்கள் மாற விரும்புகிறீர்களா? என கேட்டபோது அவர் ‘ஆமாம்’ என பதிலளித்தார்.
அதனால் அவருடைய பெயரை செக்ஸி என மாற்றுவதற்கு நீதிபதி அனுமதியளித்தார். தற்போது அவர் செக்ஸி கெரப்ரீ என எல்லோராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.