ஒலுவில் கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது
அக்கரைப்பற்று, ஒலுவில் கடற்பரப்பில் நீராடச்சென்ற நீரில் அடித்துச்செல்லப்பட்டவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து காணாமற்போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஒலுவில் கடற்பகுதிக்கு குளிக்கச்சென்றபோது நேற்று மாலை மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட போதிலும், இருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.