வடமாகாண சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை அரசியல் சாசனத்தை மீறி செயற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும்.
வட மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 1ம் மற்றும் 4ம் தீர்மானங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் புலிகளின் சார்பில் பிரசாரம் செய்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.