மோட்டார் சைக்கிளுடன் அடக்கம் செய்யப்பட்ட, மோட்டார் சைக்கிள் அபிமானி

Read Time:2 Minute, 20 Second

4044bike34தான் இறந்த பின்னர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியிருந்த நபர் ஒருவரின் ஆசையை அவரின் குடும்பத்தினர் நிறைறேற்றியுள்ளனர்.

பில்லி ஸ்டான்லி எனும் இந்நபர் மோட்டார் சைக்கிள் பிரியராக விளங்கினார். தான் இறந்த பின்னரும் தனது அபிமான ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிளை பிரிந்து இருக்ககூடாது என விரும்பிய அவர், தான் இறந்த பின்னர் அந்த மோட்டார் சைக்களுடனே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார்.

இதற்காக மோட்டார் சைக்களை வைத்து கண்ணாடியிலான விசேட சவப்பெட்டியொன்றையும் அவர் தான் உயிருடன் இருக்கும்போதே தயார் செய்துகொண்டார்.

தான் அடக்கம் செய்யப்படுவதற்காக தனது மனைவியின் கல்லறைக்கு அருகில் மேலதிக விஸ்தீரணம் கொண்ட அடக்க ஸ்தலமொன்றையும் அவர் வாங்கியிருந்தார்.

கடந்த ஞாயிறன்று தனது 82 ஆவது வயதில் பில்லி ஸ்டான்லி காலமானதையடுத்து அவரின் விருப்பப்படி இறுதிக்கிரியைகளை குடும்பத்தினர் நடத்தினர்.

கறுப்பு நிற லெதர் ஜக்கெட் மற்றும் வெள்ளைநிற தலைக்கவசம் அணிந்த நிலையில் பில்லி ஸ்டான்லியின் உடல் மோட்டார் சைக்களில் வைத்து பிணைக்கப்பட்ட நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் கைகள் மோட்டார் சைக்கிளின் ஹெண்டிலில் வைக்கப்பட்டிருந்தன.

பில்லி ஸ்டான்லி பல வருடங்களாக இது குறித்து பேசி வந்ததுடன் பலரை தனது கராஜுக்கு அழைத்து மேற்படி விசித்திர சவப்பெட்டியை காண்பித்து வந்தார் என அவரின் குடும்பத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாண சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Next post புல்மோட்டை மீனவர்களுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு