பெயின்ட் பாஸ் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்
பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தொம்பேயைச்சேர்ந்த பெயின்டரை சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவரை 48 மணிநேரம் தடுத்து வைப்பதற்கான அனுமதியை கோரவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நீள நிறத்திலான சேர்ட் மற்றும் காற்சட்டையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த ஆடைகள் ஊடகவியலாளரின் சகோதரனுடையது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அணிந்திருந்ததாக கூறப்படும் மஞ்சள் நிறத்திலான ரீ-சேர்ட் மற்றும் டெனிம் காற்சட்டை ஆகிய கழுவப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.