ஹோட்டல் அறையில் சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது
பதுளை நகரில் ஹோட்டலில் 15 வயதுச் சிறுமியுடன் தங்கியிருந்த 30 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஹோட்டலின் அறையை சோதனைக்குட்படுத்திய போது இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
ஹாலிஎல எலசர்வத்தை தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் பல முறை இந்த ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹோட்டல் முகாமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.