இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திய வாலிபருக்கு பாஸ்போர்ட் மறுப்பு
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரை சேர்ந்தவர் மாத்யூ வீலன் (34). இவர் முகம் உள்பட உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அதற்காக ரூ.25 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.
தற்போது, தனது பெயரை கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட் என மாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு பாஸ் போர்ட்டு வழங்க அந்த அலுவலகம் மறுத்து விட்டது.
அதற்கு அவரது உண்மையான பெயரையே பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கு அவர் மறுத்து விட்டார்.
ஓட்டுனர் உரிமத்தில் தற்போதைய பெயர்தான் உள்ளது. பெயரை மாற்றிக் கொள்வது எனது உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. தற்போதுள்ள பெயரிலேயே பாஸ்போர்ட் பெற போராடுவேன் என மாத்யூ வீலன் தெரிவித்துள்ளார்.