பிரான்ஸ் பிரஜை, வெலிகம ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
வெலிகம -மிரிஸ்ஸ பகுதியிலுள்ள உல்லாச ஹோட்டலிலிருந்து பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர் இரண்டு நாட்களாக சுகவீனம் உற்ற நிலையில் அறையில் தங்கியிருந்துள்ளார். இடாஸோ எடர்ரெஸ்மினி எனும் 26 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு அறையில் உயிரிழந்துள்ளார்.
இவருடைய உறவினர்களும் இவ் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். மரண விசாரணைக்காக சடலம் மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.