காதல் சல்லாபம் புரிய இடமளித்த பஸ்ஸ¤க்குத் தடை

Read Time:2 Minute, 27 Second

love-006பாடசாலை காதலர்க ளுக்கு பஸ் வண்டி க்குள் முறையற்ற வகையில் காதல் சல்லாபம் புரிய இடமளித்த தனியார் பஸ்வண்டியை தம்புள்ள பிரதேசத்தில் சேவையில் ஈடுபட தடை செய்துள்ளதாகவும் அவ்வாறு மீறி சேவையில் ஈடுபடுமாயின் தானே அதனை அடித்து விரட்ட தயங்கப் போவதில்லை எனவும் காணி – காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

நேற்று மாலை கலேவெலயில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இங்கு மேலும் தெரிவிக்கையில்:-

தம்புள்ள பஸ்நிலையத்தில் தங்களுக்கான சேவை நேரம் வரும்வரை பஸ்வண்டியை நிறுத்திவைத்து அதன் கண்ணாடிகளை திரைச்சீலையால் மூடி பாடசாலை காதலர்களுக்கு முறையற்ற வகையில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் வகையில் பஸ்வண்டியை வாடகைக்கு விடும் செயல் சமூக விரோதச் செயல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ள என கூறும்போது மக்கள் எம்மைத்தான் மனதில் கொள்வார்கள். இங்குநான் இருக்கும் வரை இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு இடமளிக்க மாட்டேன். பணத்திற்கு அடிமையாகி பலர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர் இவ்வாறான சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திருப்பதை என்னால் கூறாமல் இருக்கமுடியாது.

தம்புள்ள நகரில் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு பாடசாலை பிள்ளைகளை விற்பனை செய்யும் முறையற்ற செயல்களுக்கு நான் இடமளிக்க போவதில்லை.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்வண்டி குருணாகலை பிரதேசத்தைச் சேர்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் பிரஜை, வெலிகம ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
Next post விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்: சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு