அரலி விதை உண்டு, காலி பிரதேச பாடசாலை மாணவி பலி
காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி அரலி விதை உண்டு உயிரிழந்துள்ளார்.
காலி சர்வோதய சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இருந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அரலி விதை உண்ட சிறுமி ஆபத்தான நிலையில் கராபிட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.