பாழடைந்த இடமொன்றில் குழந்தையைக் கொன்ற தாய், தந்தை கைது
ராஜாங்கனை 14ம் கட்டை பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 04ம் திகதி மாலை மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கென அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் விசாரணை செய்தபோது தாய் குழந்தை பெற்ற பின் தந்தை குழந்தையை கழுத்து நெரிந்து கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாயும் தந்தையும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (05) தம்புத்தேகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
ராஜங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.