திடீர் திருப்பம்! இதோ வருகிறது கருணாநிதி -காங்கிரஸ் ‘நிபந்தனை கூட்டணி’!! ஆடியோ செய்த மாயம்!!

Read Time:6 Minute, 51 Second

ind.karunanidhi-2“வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சகவாசமே வேண்டாம்” என உதறித் தள்ளிய தி.மு.க.-வின் நிலைப்பாட்டில், நேற்று (வியாழக்கிழமை) ‘லேசான ஒரு மாற்றம்’ ஏற்பட்டுள்ளதாக, டில்லி வட்டார தகவல்கள் உள்ளன.

“கோபாலபுரத்தில் ‘பச்சை விளக்கு’ ஒன்று ஏற்றப்படுகிறது” என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார், டில்லியில் நாம் தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

2ஜி-ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கனிமொழி, உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஜாபர் சேட், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோர் செல்போனில் பேசிய உரையாடல்கள் திடீரென வெளியாகியபோதே, அடுத்த கட்டமாக, “கோபாலபுரத்துக்கும், டில்லிக்கும் இடையே சில பேச்சுக்கள் தொடங்க வேண்டுமே” என்ற ஊகம் எமக்கு எழுந்தது.

காரணம், இந்த ஆடியோ ஒலிப்பதிவு தற்போது வெளியாவது, தி.மு.க.வுக்கு பாதகமானது என்பது ஒருபுறம் இருக்க, காங்கிரஸூக்கு சாதகமானது என்ற மற்றொரு கோணமும் உள்ளது. (இந்த ஒலிப்பதிவு வெளியானதன் பின்னணியில் காங்கிரஸ் இல்லை என்று நம்பும் வாசகர்கள், இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டாம்… புரியாது)

இதனால், ஆடியோ டேப் ரிலீஸூக்கு பின் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமானால், டில்லியில்தான் தகவல் கிடைக்கும் என்று புரிந்துகொண்டு, அங்கே சிலரை தட்டிப் பார்த்தோம்.

“கருணாநிதி, எந்த இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டு கிளம்பினாரோ, அதே இலங்கை விவகாரத்தை வைத்து கொண்டே, மீண்டும் நம்மிடம் வரவேண்டும்.. கண்டிப்பாக வருவார்” என்றார், டில்லியில் நாம் தொடர்புகொண்ட காங்கிரஸ் தலைவர்.

இலங்கை விவகாரமா?

“அடுத்த சில மாதங்களுக்குள், ஐ.நா.சபையில் இலங்கை விவகாரம் அடிபட போகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவர போகிறது. அப்போது, மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற சர்வதேச மேட்டரை, நாடாளுமன்ற கூட்டணி மேட்டருடன் இணைத்தால் என்ன?” என்பதுதான், கோபாலபுரத்து புதிய அப்ரோச்சின் ‘ஒன்லைன்’.

அடுத்த பராவில் உள்ள சாத்தியம் எப்படி இருக்கிறது பாருங்கள்…

“இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரட்டும். அத்துடன் இந்தியாவும் அதே போல தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தால், இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் உள்ள கெட்டபெயர் நீங்குமல்லவா… அதன்பின் புதிதாக ‘அச்சா பாய்’ அவதாரம் எடுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணைவதால் தி.மு.க.வுக்கு கெட்டபெயர் ஏற்படாது அல்லவா?”

இந்த பாஸிபிளிட்டியை மையமாக வைத்தே, கோபாலபுரத்தில் இருந்து டில்லிக்கு பச்சை விளக்கு லேசாக ஆட்டிக் காட்டப்பட்டுள்ளது என்பது, டில்லி காங்கிரஸ் வட்டார தகவல்.

கலைஞர் இப்படியொரு நிபந்தனை விதித்தால், அதை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சியால் முடியுமா? ஐ.நா.வில் இந்தியா, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை கொண்டுவர முடியுமா?

ஒன்று சொல்கிறோம், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஐ.நா.வில் இலங்கைக்கு ‘வலிக்காமல் அடிக்க’ வழி இருக்கிறது!

“அந்த அடி வலிக்காது” என்பதை தமிழகத்தில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது; தி.மு.க.வின் எதிராளி கட்சி மேடைகளில் சர்வதேச அரசியலை பிரித்து மேயக்கூடிய கில்லாடிகளும் கிடையாது என்பதே, தி.மு.க.வுக்கு இதிலுள்ள பிளஸ் பாயின்ட்!

நாம் சொல்வது ஒருவேளை நடந்தால், அதை ஓரளவுக்கு பிரசார மேடைக்கு கொண்டுவர கூடியவர் வைகோதான். ஆனால், துரதிஷ்டவசமாக, அவர் கிட்டத்தட்ட இதே டோனில்தான் முன்பிருந்தே பேசுகிறார் என்பதால், ‘பழைய படத்தின் புதிய ரீமேக்’ என்று அடிபட்டு போய்விடும். பெரிய எஃபக்ட் ஏற்படாது.

ராகுல் காந்தியின் குலதெய்வம், எடோவர்ட்-லியோ ஸ்காட் டி மார்டின்வில்

சரி. காங்கிரஸ் கட்சியை கைகழுவி விட்ட தி.மு.க.வை, மீண்டும் தேடிவர வைக்க காங்கிரஸ் கட்சிக்கு உதவிய நபர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

அந்த நபர் ஒரு தமிழர் அல்ல. பிரெஞ்ச்காரர். பெயர், எடோவர்ட்-லியோ ஸ்காட் டி மார்டின்வில்!  (அருகேயுள்ள போட்டோ பார்க்கவும்)

இவரது உதவி இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சியால் கருணாநிதியை மீண்டும் அணுகியிருக்க முடியாது!

என்னங்க இது… நம்ம திருமா, டி.ஆர்.பாலு, கனிமொழி, வாசன்… குறைந்தபட்சம் ஞானதேசிகன் பெயரையாவது சொல்லாமல், வாயில் நுழையாத பெயரை சொல்கிறோம் என்று பார்க்கிறீர்களா?

நெசமாகவே, அவர்தான் கருணாநிதியை இழுக்க காங்கிரஸ் கட்சிக்கு உதவியவர்!

காங்கிரஸ் கட்சிக்கு அப்படி என்னதான் செய்தாரு இந்த ஆளு?

உலகின் முதலாவது ‘ஆடியோ ரிக்கார்டிங்’ சாதனத்தை, 1857-ம் ஆண்டு, பிரான்ஸில் கண்டுபிடித்தார்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) ‘போர்க் கைதியான’ அமெரிக்க நாய்..
Next post யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த, இலங்கை வைத்தியர் கைது