சூர்யாவின் சம்பளம் 40 கோடி
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய் விட்டது.
அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில பகுதிகளின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள்.
ஏழாம் அறிவு, மாற்றான் என அடுத்தடுத்து தோல்வியால் ஆட்டம் கண்ட சூர்யாவை மீண்டும் தூக்கி விட்டது ‘சிங்கம்-2’ இறுதியாக வந்த டாப் ஹீரோக்கள் படங்களில் கனிசமான லாபத்தைப் பெற்ற படமாக கருதப்படுகின்றது.
அதன் பிறகு தற்போது சூர்யா லிங்குசாமி தயாரித்து இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 18 கோடி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு உறுமையையும் சூர்யா கேட்டிருக்கிறார். தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லி விட்டதாம்.
தெலுங்கு உறுமை குறைந்தது 20 கோடியாவது போகும். அப்படியென்றால் சூர்யாவில் சம்பளம் 40 கோடியா? என்று முணுமுணுக்கிறார்கள் கோலிவுட்டில்…