“எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” – வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!
சென்னை: நடிகை வனிதா (விஜயகுமார்) புதிதாக தயாரிக்கும் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவர் ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று விட்டார்.
இப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. தாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்று வனிதாவும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் புதிதாக எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற தலைப்பில் படம் ஒன்றைத் தயாரிக்கிறார் வனிதா.
இந்தப் படத்தை வனிதாவின் நண்பரான ராபர்ட் தான் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சரவணன் பிள்ளை ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. முதல் காட்சியை க்ளாப் அடித்து வனிதா தொடங்கி வைத்தார்.