மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டிய மணப்பெண்

Read Time:1 Minute, 33 Second

WEDDING.001திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் என்ற ஊரில் ஆணுக்குப் பெண் தாலி கட்டிய வினோத திருமணம் நடந்தது.

நீடாமங்கலம் காட்டிநாயக்கன்தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் வசந்திக்கு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பழனிநாயக்கன், திலகவதி ஆகியோரின் மகன் சதீசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த திருமணம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்தில் கூடி இருந்தனர்.

நிகழ்ச்சியில் முதலில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி கொண்டனர். அதைத்தொடர்ந்து மணமகள் வசந்தி, மணமகன் சதீஷ் கழுத்தில் தாலி கட்டினார்.

இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.

அப்போது மணமக்களின் பெற்றோர் மைக் மூலம், ஆணுக்கு, பெண் சமம் என்பதை வலியுறுத்துவதற்காக மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதாக தெரிவித்தனர்.

நீடாமங்கலத்தில்இந்தத்திருமணம்தான் நேற்று முழுவதும் பரபரப்பான பேச்சாககாணப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களை குறிவைத்து; பொலிஸார் எனக் கூறி நகை, பணம் கொள்ளை!
Next post அதிகமாக சாப்பிட்ட இப்படித்தான் வயிறு வெடிக்கும்: சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்