கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் விபத்தில் ஐந்து பேர் பலி
ஏ-9 வீதியில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் 233 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த வான் ஒன்று அதன் முன்பாகச் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் நீர்வேலியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ஏழாலையைச் சேர்ந்த சாரதி கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றது.