விஜயகாந்த் மாடு வியாபாரம் செய்கிறாரா? தமிழருவி மணியனுக்கு சந்தேகம்!

Read Time:3 Minute, 6 Second

ind.vijayakanth-02தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறுகிறது. இதற்கான அறிவிப்பு மதுரையில் இன்று வெளியாகிறது. நோட்டீசாக அச்சடிக்கப்பட்ட கட்சியின் தீர்மானத்தை மதுரை மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த பின் முறைப்படி கட்சி தொடங்கியதாக தமிழருவி மணியன் இன்று அறிவிக்கிறார்.

மதுரையில் காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

“2016-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப்போகிறது. வைகோ முதல்வராக இருப்பார். அந்த ஆட்சியில் காந்திய மக்கள் கட்சியும் இருக்கும்” என்றார் தமிழருவி மணியன்.

பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசுகையில், “பாரதிய ஜனதா கூட்டணிக்காக விஜயகாந்திடம் பேசினேன். எனது பேச்சுகளை தெளிவாகக் கேட்டார். அவை நெகிழ்ச்சியான தருணங்கள். தே.மு.தி.க. தனியாக நின்றால் நான் வரவேற்பேன். பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. வராமல் வேறு முடிவு எடுத்தால், அவருக்கு பகிரங்க கடிதம் எழுதுவேன்.

(கூட்டணி பேச்சுவார்த்தைகள் போகிற போக்கை பார்த்தால், அநேகமாக விஜயகாந்துக்கு பகிரங்க கடிதம் எழுத வேண்டிய கஷ்டம் தமிழருவி மணியனுக்கு இருக்காது!)

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை என்ன செய்யப்போகிறது எனச் சொல்லவில்லை. எங்களது பார்வை இதுதான் என ஒளிவு மறைவின்றி தெரிவிக்காமல் இருப்பதுவா ஒரு கட்சியின் அழகு?

கையில் துண்டைப் போட்டு நடத்தும் மாட்டு வியாபாரமா இது. கூட்டணியில் இடம்பெறுவதை இனி அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

என்னங்க மணியன்.. நம்ம கேப்டனையே துண்டை வைத்து கலாய்க்க முடியுமா?

அவுரு துண்டை கையில் போட்டால், மாடு வியாபாரம்.. தோளில் போட்டால், அரசியல்… தலையில் கட்டினால், சினிமா..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சற்றுமுன் விபத்துக்கு உள்ளான, அல்ஜீரிய ராணுவ விமானம்! பயணித்த 103 பேர் பலி!!
Next post (VIDEO) மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை