சற்றுமுன் விபத்துக்கு உள்ளான, அல்ஜீரிய ராணுவ விமானம்! பயணித்த 103 பேர் பலி!!

Read Time:1 Minute, 59 Second

algeria-2ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று கிழக்கு அல்ஜீரியாவில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 103 பேரும் கொல்லப்பட்டதாக, சற்றுமுன் அல்ஜீரிய தனியார் டி.வி. சேனல் ‘எனாஹர் டிவி’ செய்தி வெளியிட்டது.

‘விபரமறிந்த வட்டாரங்களை’ மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தியில், கொல்லப்பட்டவர்களில் 4 பேர் விமான சிப்பந்திகள் எனவும், 99 பேர் அல்ஜீரிய ராணுவத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சில நிமிடங்களில் செய்தியில் திருத்தம் அறிவிக்கப்பட்டு, கொல்லப்பட்ட 99 பேரும் ராணுவத்தினர் அல்ல, ராணுவத்தினரில் உறவினர்கள் என மாற்றிக் கொண்டது, ‘எனாஹர் டிவி’

அல்ஜீரியா தலைநகர் அல்ஜியர்ஸில் இருந்து, 500 கி.மீ. தொலைவில் உள்ள ஓம் எல்-பொவாகி மாகாணத்தின் மலைப் பகுதியிலேயே விமானம் மோதியதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் அடித்துக் கொண்டிருந்த வேகமான காற்று, விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இன்று நடந்துள்ள இந்த விமான விபத்து, அல்ஜீரியாவில் கடந்த 2003-ம் ஆண்டுக்குப்பின் நடந்த மோசமான விபத்து, 2003-ம் ஆண்டு, அல்ஜீரிய தேசிய விமான சேவை நிறுவனம் ஏர்-அல்ஜீரியேவின் பயணிகள் விமானம் ஒன்று டேக்-ஆஃப்பின் போது விபத்துக்குள்ளானதில், 102 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘2013-அமெரிக்க கொடையாளர்கள்’ பட்டியலில், ‘ஃபேஸ்புக்’ அதிபர் முதலிடம்!!
Next post விஜயகாந்த் மாடு வியாபாரம் செய்கிறாரா? தமிழருவி மணியனுக்கு சந்தேகம்!