இஸ்ரேலில் கன்னி மேரி சிலை அழுவதைக் காணத் திரளும் மக்கள்

Read Time:1 Minute, 47 Second

9f4ce567-8இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கௌரி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவரது மனைவி அமிரா தங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் கன்னி மேரி சிலை சமீப காலங்களில் பளபளப்புடன் இருப்பதைக் கவனித்துள்ளார்.

சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெயத்தன்மை தென்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டாமென்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவரும் இந்த சிலையின் மேல் எண்ணெய் வடிவதைக் கண்டதாகக் கூறவே, இந்த செய்தி எங்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சிலை அழும்போது எண்ணெய் வடிகின்றது என்று கூறி அதனைப் பார்ப்பதற்காக இங்கு திரளுகின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர்த்துளி திரண்டு வெளிப்பட்டதாக இந்தக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியாவில் 12 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது
Next post நடிகைகளை நோக்கி படையெடுக்கும் அரசியல் கட்சிகள்