அக்கரைப்பற்றில் வீடு தீப்பற்றி, யுவதி பலி
அக்கரைப்பற்று இன்றுகாலை வீடு தீப்பற்றி எரிந்ததால் யுவதி ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று தலைவர் வீதி வாச்சிக்குடாவில் வசித்து வந்த 22 வயதுடைய தங்கராசா திவ்வியா எனும் யுவதியே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.
இந்த யுவதியின் பெற்றோரும் சகோதர சகோதரிகளும் வெளியே சென்ற நிலையில் யுவதி தனிமையில் இருந்த வேளையிலேயே இத்துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேசத மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வீடு தீப்பற்றியமை மற்றும் மரணம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.