By 21 June 2006

மட்டக்களப்பில் வர்த்தகர் சுட்டுக்கொலை

rivolver-1.bmpமட்டக்களப்பில் தமிழ் வர்த்தகரான நிர்மலகுமாரன் (வயது 55) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நான்கு குழந்தைகளின் தந்தையான நிர்மலகுமாரன் மதுபான சாலை விடுதியை கொம்மாந்துறையில் நடத்தி வந்தார். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகம் அருகே பல ஆண்டுகளாக இந்த விடுதியை அவர் நடத்தி வந்தார். நிமலகுமாரனின் தலையிலும் மார்பிலும் 3 முறை 9 எம்.எம். கைத்துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட நிமலகுமாரனின் உடல் ஏறாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.



Comments are closed.