ஒரு மாத குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்-
இரத்தினபுரி, மல்வல சந்திப் பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவரின் ஒரு மாதம் மட்டுமேயான குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது.
நேற்று அதிகாலை 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தை நேற்று உடனடியான இரத்தினபுரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் குழந்தை உயிரிழந்துள்ளது.
தாய்ப் பால் தொண்டையில் இறுகியமையின் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.