திருகோணமலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த 52 வயது நபர்
திருகோணமலையில் ஒன்பது வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயதுடைய சிறுமியின் உறவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான ஜீ.நந்தசேன (52) மயில குடவ-மொறவெவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தனர்.
தனது வீட்டுக்கு அருகில் உள்ள மருமகனின் மகளையே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி உள்ளார்.காலை வீட்டில் தனிமையாக இருந்த போது இச்சம்பவம் இடம் பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர் வீதி புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கூலித்தொழிலாளி எனவும் தெரியவருகின்றது.
சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.