15 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 30 வயது கனடிய ஆசிரியை கைது
கனடாவில் Calgary என்ற நகரில் 30 வயது பள்ளி ஆசிரியை 15 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவருடன் உறவு வைத்த மாணவனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கனடாவில் Jennifer Mason என்ற 30 வயது ஆசிரியை Catholic school என்ற பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவர் தன்னிடம் படிக்கும் 15வயது மாணவர் ஒருவரிடம் வாகனம் ஒன்றில் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டபட்டார்.
Calgary போலீஸ் இந்த புகார் குறித்து விசாரணை செய்தபோது, அந்த புகார் உண்மை என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் ஆசிரியை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவர் மீது வயது குறைந்தவர்களிடம் பாலியல் உறவு கொண்ட சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.