மகன் கடத்தல்: EPDP அலுவலகத்தில் முறையிடச் சென்ற போது, கடத்த வந்தவர்கள் அதே உடையுடன் அங்கு நின்றனர்!!

Read Time:4 Minute, 42 Second

EPDP flag_CIஜனாதிபதி ஆணைக்குழு முன்பான சாட்சியங்களில் இராணுவத்தினதும் துணை இராணுவக் குழுக்களினதும் கடத்தல் முறைப்பாடுகளே அதிகம்’

இலங்கை அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்கள் பதிவு செய்ய முற்பட்ட போது இலங்கை இராணுவத்தினதும் துணை இராணுவக்குழுக்களினதும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகிவருகின்றன.

இன்று யாழ். அரச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளில் சில வருமாறு

யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனுவேற்பிள்ளை என்ற தந்தை தனது மகன் மனுவேற்பிள்ளை சுதர்சன் (வயது 31) கடத்தப்பட்டமை தொடர்பில் சாட்சியமளித்தார். 2006-09-11 அன்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஐவர் எமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எனது மகனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

இதனை அடுத்து மறுநாள் அதிகாலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்காக யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு சென்ற போது இரவு எனது மகனைக் கடத்துவதற்காக வந்திருந்த நபர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் போது அணிந்திருந்த அதே உடைகளுடன் அங்கு நின்றிருந்தார்கள் இதனால் நாங்கள் அங்கிருந்து திரும்பி வந்து விட்டோம் எனத் தெரிவித்தார்.

இதன் போது இடைமறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர் எதற்காக ஈபிடிபி அலுவலகம் சென்றிருந்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த மனுவேற்பிள்ளை, அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரே ஒரு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவரிடம் முறையிடச் சென்றோம் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை வேலைணைச் சேர்த பா.ஆனந்தி என்ற தாய் தனது மகன் வசந்தரூபன் (வயது 25) கடத்தப்பட்டமை தொடர்பில் சாட்சியமளித்தார்…

2008-03-07 அன்று வேலணையில் புகையிலைத் தோட்டத்தில் எனது மகனும் வேறு இளைஞர்கள் மூவருமாக இணைந்து புகையிலை பிடுங்கிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற ஈபிடிபியினர் இளைஞர்கள் நால்வரையும் பிடித்து அவர்களின் கைகளையும், கண்களையும் கட்டி மற்றைய இளைஞர்கள் மூவரையும் குப்புற படுக்கவைத்துவிட்டு எனது மகனை கொண்டு சென்றுவிட்டனர். இதுவரையில் எனது பிள்ளை தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

சாட்சியமளிப்பின் போது வேலணை மேற்கு பகுதியைச் சேர்ந்த சிவபாதம் இளங்கோதை என்ற பெண் சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில்…

போருக்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக தாம் குடியமர்ந்திருந்ததாகவும் இறுதிப் போரின் போது 2009-05-17ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்காக காத்திருந்த போது விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல் பிரிவில் செயற்பட்ட எனது மருகனான சின்னதம்பி பரமேஸ்வரன் அவருடைய மனைவியும் எனது மகளுமான பரமேஸ்வரன் சசிகலா மற்றும் எனது பேரப்பிள்ளைகள் மூவரையும் கருணாகுழுவினர் வந்து இழுத்துச் சென்றனர் என்றும் அவர்கள் ஓமந்தை நோக்கி பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டதை தான் கண்ணுற்றதாக அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா?: டைரக்டர் பதில்
Next post புலியின் கூண்டிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சீன வாலிபர்