டளஸ் அளகப்பெரும – பான் கீ மூன் சந்திப்பு
அமைச்சர் டளஸ் அளகப்பெரும ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இளைஞர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகள், சமாதானம், மீளமைப்பு தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, மே மாதம் இடம் பெறவுள்ள உலக இளைஞர் மாநாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.