சிறுமி மீது வயோதிபர் துஷ்பிரயோகம்
15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற 55 வயது முதியவர் ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினம் மதியம் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்த முயன்ற அருகிலுள்ள 55 வயது முதியவர் இச்சிறுமியை அழைத்துக் கொண்டு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்க முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த அயலவர்கள் சிலர் அம் முதியவரை நையப்புடைத்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கல்முனை பொலிஸ் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற முதியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார்