இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படவில்லை; தவறாக பயன்படுத்தப்படுவதாக தகவல்

Read Time:2 Minute, 22 Second

facebook-loveசமூக இணையத்தளமான பேஸ்புக் தவறான முறையில் கையாளப்படுகின்றமையே, நாட்டின் பல சமூக பிரச்சினைகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மானிடவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி பிரனீத் அபேசுந்தர கூறுகின்றார்.

இதனால் இளம் சமூகம் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக இணைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் கலாநிதி பிரனீத் அபேசுந்தர கூறியுள்ளார்

இதேவேளை, உள ரீதியில் பலர் பேஸ்புக்கிற்கு அடிமையாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்கலைக்கழகத்தின் உளவியல் தொடர்பான பேராசிரியர் ஞானதாச பெரேரா குறிப்பிடுகின்றார்.

இளைஞர்கள் பலர் பேஸ்புக்கை பயன்படுத்துவதற்காக நேரத்தை வீண் விரயம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேஸ்புக் சமூக இணையத்தளத்திற்கு இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.

இந்த தகவல் பொய்யானவொன்று என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவிக்கின்றார்.

பேஸ்புக் சமூக இணையத்தளத்தை தடை செய்வது தொடர்பில், அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது
Next post உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய சிறுவர்கள் பலி