கைத்தொலைபேசியை பெற்றோர் திருப்பித்தர மறுத்தமையால் மாணவி தற்கொலை
தன்னிடமிருந்த கைத்தொலைபேசியை பெற்றோர் பறித்தமையினால், பொல்பித்திகம, மஹூ பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியின் காதலர் என குறிப்பிடப்படும் ஒருவரால் இந்த கைத்தொலைபேசி பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கைத்தொலைபேசியில் சில புகைப்படங்கள் காணப்பட்டதாகவும், அதனை திருப்பித் தருமாறு குறித்த மாணவி கோரியபோதும், பெற்றோர் மறுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கவலையடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.