காதலிய பார்க்கச் சென்ற இளைஞர் போதையில் நீரில் மூழ்கி மரணம்
நல்லதன்னி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸபான நீர் தேக்கத்தில் குளிக்க சென்ற 19வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தயாபாலன் பிரபு எனும் நுவரெலியா – ஹவெலி பிரதேசத்தை சேர்ந்தவர் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் தனது காதலியை பார்ப்பதற்காக லக்ஸபான பிரதேசத்திற்கு வந்திருந்ததோடு, மது அருந்தி விட்டு குளிக்க சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மரணமடைந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கபட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பபடவுள்ளது.