இளைஞர் யுவதிகளுக்கு, ஆபாசப்படம் காண்பித்த பெண்ணொருவர் கைது
கைத்தொலைபேசி மூலம் ஆபாச படங்களைப் பிடித்து அவற்றினை இளைஞர் யுவதிகளுக்கு காண்பித்த காட்டி பெண் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகம பொல் அத்துமோதறையில் வைத்தே இப் பெண் கைது செய்யப்பட்டார். 19 வயதான இப் பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனது கணவனை இழந்தவராவார்.
வெலிகம பொலிஸ் பொறுப்பதிகாரி பத்ரஜீ எஸ்.டி.காலிங்க மகளிர் பிரிவு பொலிஸ் கோஷ்டியினர் இவரது வீட்டை சுற்றி வளைத்து இவரைக் கைது செய்து தொலைபேசியையும் ஆபாச படங்களையும் கைப்பற்றினர்.
இப் பெண்ணை மாத்தறை நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.