ஆஸ்திரேலிய சாலை விபத்தில் 4 பேர் பலி: இந்திய வம்சாவளி டிரைவர் மீது வழக்கு

Read Time:2 Minute, 5 Second

accsident-01ஆஸ்திரேலியாவில் உள்ள டிரக் விற்பனை நிறுவனம் ஒன்றின் துணை ஒப்பந்ததாரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோபன்தீப் கில்(27) என்பவர் செயல்பட்டு வந்தார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடனி என்ற பகுதியில் டிரக் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது சிக்னல் ஒன்றில் நிறுத்தாமல் சென்ற அவர் ஒரு கார் மீது மோதியதில் அந்தக் கார் தீப்பிடித்து எரிந்துவிட்டது.

அதில் பயணித்துக் கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க தம்பதியரும் அவர்களுடைய இரண்டு வயது நிரம்பிய மகன் மற்றும் மகளும் அந்தத் தீவிபத்தில் பலியாகினர். ஒன்பது வயது நிரம்பிய ஒரு மகன் மட்டும் அந்த விபத்தில் உயிருடன் தப்பியுள்ளான்.

இந்த விபத்தில் கைது செய்யப்பட்ட ஜோபன்தீப் மீது சிக்னலில் நிற்காமல் சென்றது, அதிக வேகம், ஆபத்தான டிரைவிங் மற்றும் இதன்மூலம் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேரைப் பலியாக்கியது என்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணைக்காக மெல்போர்ன் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். விபத்தைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த நிலையில் அவர் காணப்படுவதாக ஜோபன்தீப்பின் வக்கீல் அப்துல்லா அல்டின்டாப் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விபத்து குறித்த விசாரணை அடுத்த வாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னர் மனித புதைகுழி மீண்டும் தோண்டப்படுகிறது
Next post அனந்திக்கு எதிராக முறைப்பாடு