தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு

Read Time:1 Minute, 59 Second

saudiசவுதி அரேபியாவின் மன்னர் ஆக இருப்பவர் அப்துல்லா. இவரது மகள்கள் சாஹர் (42), ஜவாகர் (38), ஹாலா (39), மாகா (41). இளவரசிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இவர்களில் சாஹர், ஜவாகர் ஆகியோர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கைக்கு இ–மெயில் மற்றும் டெலிபோனில் பேசினர்.

அப்போது, தாங்கள் இருவரும் ஜெட்டாவில் தனி சொகுசு பங்களாகளில் அடைத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோன்று தனது தங்கைகள் ஹாலா, மாகா ஆகியோரும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என கடுமையான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த கடுமையான சட்ட திட்டங்களை கடைபிடிக்க வலியுறுத்தி இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இளவரசிகளின் தாயார் அலானவுடு அல்பயஷ் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தனது மகள்களின் விருப்பத்துக்கு எதிராக ஜெட்டாவில் தனி பங்களாக்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வெளி உலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். எனவே அவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவரை மன்னர் அப்துல்லா விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தக்காட்சிகளை பார்க்க நான் விரும்புகிறேன், மக்களும் ரசிக்கின்றனர் : கரண் ஜோஹார்
Next post நடிகையை தடுமாற வைத்த நடிகை!