காருடன் நீரில் மூழ்யவர், தன்னை காப்பாற்றியவர்களுக்கு எதிராக வழக்கு

Read Time:2 Minute, 36 Second

46761காருடன் நீரில் மூழ்கியவரின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு எதிராக உயிர் மீட்கப்பட்ட நபரே வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கொலரடா மாநிலத்தின் போல்டர் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரோய் ஓர்டிஷ் என்பவரே தன்னை காப்பாற்றியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த வருடம் கொலரடாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது காரில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ரோய் காருடன் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் இவர் வாகனத்துடன் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் போல்டர் அரசு மற்றும் தன்னை மீட்டவர்களுக்கெதிராக ஏறத்தாள 500 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வெள்ளம் ஏற்படும்போது பாதைகளை மூடுவதும் அரசின் கட்டாயக் கடமையாகும். இவ்விபத்தின் பின்னர் 40 ஆயிரம் டொலர்களுக்கும் அதிகமான பணத்தினை வைத்திய தேவைகளுக்கான செலுத்தியுள்ளார் ரோய். அத்துடன் தற்போதும் தோள்பட்டை பாதிப்பு உள்ளதாகவும் மரணம் தொடர்பில் அடிக்கடி கனவு உள்ளிட்டவையால் தூங்குதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ரோயின் சட்டத்தரணி எட் பேர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

வாகனம் மீட்கப்படும்போது ரோய் வாகனத்தினுள் இருப்பது அறியப்படவில்லை என்பதுடன் 2 மணிதியாலங்களாக மீட்கும் வரையில் மிகச்சொற்ப அளவிலான காற்றையே காரினுள் சுவாசிக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரோயின் உரிமை கோரல் தொடர்பில் அரசு கவனித்துவருவதாகவும் தற்போது அது விசாரணையில் உள்ளதாகவும் போல்டர் அரசு தெரிவித்துள்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலன்புரி முகாமில் தங்கியிருந்த ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கைது
Next post இயக்குனர் – நடிகை மதுரீமா வெளிநாட்டில் மோதல்..