இரத்தக் கசிவு ஏற்படும் 600 வருடங்கள் பழைமையான அதிசய மரம்..

Read Time:2 Minute, 12 Second

4700Tree-மரத்திலிருந்து பால் வடிவது வாடிக்கையான விடயம். ஆனால் எகிப்தில் 600 வருடங்களுக்கு முன்னர் நடப்பட்ட மரமொன்றிலிருந்து அதிசயமாக இரத்தக் கசிவு ஏற்படுகின்றது.

இதில் பெரும் அதிசயம் என்னவென்றால் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மட்டுமே என இக்கசிவு ஒரு ஒழுங்கு முறையில் ஏற்படுகின்றது.

இந்நாட்களில் இந்த அதிசய மரத்திலிருந்து வெளிவரும் திரவத்தினை பெற்றுக்கொள்வதற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிகின்றனராம்.

இந்த அதிசய மரத்திலிருந்து சிவப்பு நிறத்தில் வெளிவரும் திரவப் பதார்த்தத்தினால் நோய்கள் குணமடைவதாக அப்பிரதேச மக்கள் நம்புகின்றனர். இதனால் சிறுவர்கள் மரத்தில் ஏறி திரவத்தினை சேகரிப்பதுடன் பெண்கள் மரத்தின் கீழ் துணியினால் ஒற்றியும் போத்தலில் சேகரிக்கின்றனர்.

உடல் நலம் குன்றியவர்கள் இந்த மரத்தடிக்கு வந்து வெளியேறும் குருதியினை தொடர்ச்சியாக 3 வெள்ளிக்கிழமைகளில் பூசி வந்தால் குணமடைவார்கள். அத்துடன் சுத்தமின்றி மரத்தில் ஏறினால் வீழ்ந்துவிடுவார்கள் என அப்பிரதேச மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் மரங்களிலிருந்து கசிவு ஏற்படுவது சாதாரண விடயம். கல்வியறிவு குறைந்த மக்களே இதனை அதிசயமாக கருதுவதாக விவசாயவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் சிவப்பு நிறக் கசிவு அசாதராணமானது அதிலும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நேரத்தில் கசிவு ஏற்படுகின்றமை அதிசயம் என குறித்த மரமுள்ள பிரதேச மக்கள் தெரிவித்து;ளளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) யோகாசனத்தில் கலக்கும் தாயும், மகளும்..
Next post யாழ் கிரிக்கெட் போட்டியில் இளைஞன் அடித்துக் கொலை!!