பிச்சை எடுத்து ரூ.6.5 கோடி சேர்த்த, 100 வயது சவுதி மூதாட்டி மரணம்

Read Time:2 Minute, 38 Second

003bபிச்சை எடுத்து வாழ்ந்த 100 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். அவர், வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயம், நகைகள், வீட்டு பத்திரங்களை சேர்த்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியா ஜெட்டா நகரில் வசித்தவர் இஷா. இவருக்கு பார்வை கிடையாது. கடந்த 50 ஆண்டுகளாக தெருவோரங்களில் பிச்சை எடுத்து வந்தார்.

அவர் திடீரென தனது வீட்டில் இறந்து விட்டார். வீட்டில் தங்க நாணயங்கள், நகைகள், கட்டுக்கட்டாக பணம், ஜெட்டாவில் உள்ள அல் பலாட் மாவட்டத்தில் 4 வீடுகள் இருப்பதற்கான பத்திரங்களை வைத்துள்ளார்.

வீடு, நகை, ரொக்க பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இஷா வளர்த்து வந்த அகமது அல் சயீதி என்பவர் கூறியிருப்பதாவது:

மூதாட்டிக்கு தாய் மற்றும் சகோதரிகள் இருந்தனர். அவர்களும் பிச்சை எடுத்து வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். தவிர உறவினர்கள் யாரும் இல்லை. தாய், சகோதரி சேர்த்து வைத்திருந்த பணம், நகைகளும் இஷாவுக்கு கிடைத்தது.

அத்துடன் தான் பிச்சை எடுத்து சேர்த்து வைத்துள்ள பணம், சொத்துக்கள் எல்லாம் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று இஷா உயில் எழுதி வைத்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.இஷாவிடம் ஏராளமான பணம் சேர்ந்து விட்டதை அறிந்து, பிச்சை எடுக்கும் தொழிலை விட்டுவிடும்படி கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை.

இஷாவுக்கு சொந்தமான 4 கட்டிடங்களில் பல குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களிடம் இஷா வாடகை வாங்குவதில்லை.இவ்வாறு அகமது அல் சயீதி கூறினார்.

இஷா தற்போது இறந்து விட்டதால், அவருக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்படுவார்களா என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மான்செஸ்டர் கால்பந்து குழு பயிற்சிக்கு, கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் மகன் தேர்வு!
Next post த்ரில் படத்துக்கு, வடிவேலுவின் டயலாக்