காதலியை காப்பாற்றி, உயிரிழந்த இளைஞன்
Read Time:1 Minute, 15 Second
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதப்படவிருந்த தனது காதலியை காப்பாற்றியபின் அந்த ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த மெடிஸ் மூர் எனும் இந்த இளைஞர் தனது காதலியான மிகெய்லாவுடன் நடன வகுப்புக்குசென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள் தண்டவாளத்தில் நடந்துகொண்டிருந்தபோது, சரக்கு ரயிலொன்று அத்தண்டவாளத்தில் வேகமாக வந்தது.
அதனால் மெடிஸ் மூர் உடனடியாக செயற்பட்டு தனது காதலியை தண்டவாளத்திலிருந்து தள்ளினார். இதனால் சிறு காயங்களுடன் அந்த யுவதி தப்பினார். எனினும் மெடிஸ் மூர் ரயிலில் மோதி உயிரழந்தார்.
மிகெய்லாவை மூர் தள்ளிவிடாமல் இருந்திருந்தர்ல் பெரும்பாலும் மிகெய்லா உயிரிழந்திருப்பார் என அந்த யுவதியின் தந்தை ஷவான் தெரிவித்துள்ளார்.
Average Rating