ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Read Time:1 Minute, 39 Second

rajini.kochadaiyaanசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை லண்டனைச் சேர்ந்த ஒன்டர்புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் விடுத்த அறிவிப்பில், ‘சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் கஷ்டப்பட்டு திரைப்படத் துறையில் முன்னேறி சாதனை படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அவருக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம் எனவும் இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது என்றும் கூறினார்.

இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம். அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம் என ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூனை சூப் வைத்து படத்துடன் சோஷியல் மீடியாவில் சமையல் குறிப்பு வெளியிட்ட, சீனாவை சேர்ந்த இளம் பெண்
Next post எஜமானருக்கு காதல் மூட்டிய வழிகாட்டி நாய்கள்