கத்தார் நாட்டில் வளர்ப்பு மகளை பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு ஜெயில்

Read Time:1 Minute, 42 Second

002cஅமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயர் மாத்யூ. இவரது மனைவி கிரேஸ் {ஹவாங். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் தவிர குளோரியா என்ற 8 வயது குழந்தையை கானாவில் இருந்து தத்தெடுத்து வளர்த்தனர்.

இந்த நிலையில் மாத்யூ – கிரேஸ் தம்பதி தங்களது குழந்தைகளுடன் வேலை விஷயமாக கடந்த 2012–ம் ஆண்டு கத்தார் நாட்டுக்கு வந்து தங்கினர்.

அங்கு, அவர்களது வளர்ப்பு மகள் குளோரியா திடீரென இறந்தாள். அவளுக்கு சரிவர உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக மாத்யூ – கிரேஸ் தம்பதியை கத்தார் நாட்டு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கத்தார் கோர்ட்டில் நடந்தது. அப்போது, குளோரியாவை தத்தெடுத்ததில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பல வித நோய்களால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள் என விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

அதை மறுத்த நீதிபதி, தம்பதி அக்குழந்தையை பட்டினி போட்டு கொன்றதாக கூறி அவர்களுக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தீர்ப்புக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் பிரசாரத்தில், அத்துமீறி நெருங்கிய இளைஞரை அறைந்த நக்மா..
Next post இங்கேயும் பங்காளிச் சண்டையா? விஜயகாந்தின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..