நக்மாவை காண திரளும் இளைஞர் கூட்டம்..

Read Time:2 Minute, 39 Second

nagmaஇந்திய தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நக்மாவை காண இளைஞர்கள் பெருமளவில் திரள்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

உத்தரப் பிரதேசம் மீரட்டில் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் வேட்பாளரான நடிகை நக்மாவை காண இளைஞர்கள் கூட்டம் திரள்கிறது.

மீரட்டின் ஜனிகோட்டி பகுதியில் கடந்த வியாழக் கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேடையை நோக்கி சென்ற நக்மாவை மிக அருகில் காண்பதற்காக இளைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

அந்த நேரத்தில் ஒரு இளைஞர் நக்மாவை தொட்டு சீண்டியுள்ளார்.

இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான நக்மா, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது குறித்து நக்மா தேர்தல் மேடையிலும் கோபத்துடன் கருத்து வெளியிட்டார்.

‘நான் மும்பையிலிருந்து உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். என்னைப் போன்ற வெளி ஆட்களுக்கு தொல்லை கொடுத்தால் மீரட்டிற்கு யாரும் வர மாட்டார்கள். இதைக் கூற எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என அவர் கூறியுள்ளார்.

நக்மாவை சீண்டிய இளைஞரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் சமாஜ்வாதி அரசு மீது நக்மா தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நான்கு முனை போட்டி நிலவும் மீரட்டில் தற்போது எம்பியாக இருக்கும் ராஜேந்தர் அகர்வால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி சார்பில் உத்திர பிரதேச அமைச்சர் ஷாயித் மன்சூர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மீரட் எம்பி ஷாஹித் அக்லாக் ஆகியோரும் வேட்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதியில் நக்மா களத்தில் இறங்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16 சிறுமிகளை கற்பழித்த சீனருக்கு மரண தண்டனை
Next post சாதி பிரச்சினை: கர்ப்பிணி மகளை, கௌரவக்கொலை செய்த தமிழ் தாய்