உணவு விடுதியில் சிசுவாக கைவிடப்பட்டவர், 27 வருடங்களின்பின் தாயாருடன் இணைவு

Read Time:2 Minute, 37 Second

4956baby300சமூக வலைத்தளங்கள் மூலமான கோரி, பிறந்த சில மணித்தியாலங்களேயான நிலையில், அமெரிக்காவிலுள்ள பேர்கிங் உணவு விடுதியின் கழிவறையில் தனது தயாரினால் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட யுவதியொருவர் க்கைகள் மூலம் தன்னைப் பெற்ற தாயாருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

27 வயதான கெத்தரின் டிப்ரில் எனும் இந்த யுவதி 1986 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது திருமணாகி 3 பிள்ளைகளின் தாயான நிலையிலும் தன்னைப் பெற்ற தாயாரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை அவரின் மனதில் குடிகொண்டிருந்தது.

இதனால், கடந்த 2 ஆம் திகதி பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்டத்துடன் கோரிக்கையொன்றை இந்த யுவதி விடுத்திருந்தார்.

‘என்னை பெற்ற தாயை தேடுகிறறேன். அவர் என்னை 1985 செப்டெம்பர் 15 ஆம் திகதி பெற்றார். நான் பிறந்த சில மணித்தியாலங்களேயான நிலையில் பென்சில்வேனியா அலென்டவுனிலுள்ள பேர்கர் கிங் கழிவறையில் அவர் என்னை விட்டுச்சென்றார். தயவு சயெ;து இப்புகைப்படத்தை பகிர்ந்து அவரை கண்டுபிடிக்க உதவுகள்’ என கெத்தரின் கோரியிருந்தார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று கெத்தரினும் அவரை பெற்ற தாயாரும் முதல் தடவையாக சந்தித்தார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிக உணர்ச்சிகரமான சந்திப்பு எனவும் தனது தாயார் மிக இனிமையானவர் எனவும் கெத்தரின் தெரிவித்துள்ளார்.

கெத்தரினின் தயாhர் 16 வயதில் வெளிநாடொன்றுக்கு சென்றிருந்த வேளையில், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் கர்ப்பமடைந்ததாகவும் அநாவசிய கேள்விகளை எதிர்கொள்ள விரும்பாமையால் தனது குழந்தையை அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவில்லை எனவும் கெத்தரினின் தாயாரின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறை தண்டனையில் இருந்து தப்பிய உயர்ந்த மனிதன்
Next post நான்கு மாத குழந்தை விற்கப்பட்ட சம்பவம்; மூன்று பெண்களுக்கு விளக்கமறியல்