(PHOTOS) பாட­கி­ மாதங்கி மாயா அருள்­பி­ர­கா­ஷத்­திடம், 1.5 கோடி டொலர் நஷ்ட ஈடு கோரிக்கை..!

Read Time:4 Minute, 35 Second

mia90sஇலங்­கை­யி­லி­ருந்து பிரிட்­ட­னுக்கு புலம்­பெ­யர்ந்து உலகப் புகழ்­பெற்ற பாட­கி­யாக விளங்கும் மாதங்கி மாயா அருள்­பி­ர­கா­ஷத்­திடம் (MIA), 15 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் வழக்குத் தொடுத்­தி­ருந்த அமெ­ரிக்க சுப்­பர்போல் கால்­பந்­தாட்ட விளை­யாட்டு ஏற்­பாட்­டா­ளர்கள், தற்­போது அவ­ரிடம் மேலும் 1.51 கோடி டொலர்களை (சுமார் 197 கோடி ரூபா) நஷ்ட ஈடாக கோரி­யுள்­ளனர்.

2012 ஆம் ஆண்டில் அமெ­ரிக்­காவின் தேசிய கால்­பந்தாட் லீக் இறு­திப்­போட்­டியின் இடை­வே­ளையில் இசை நிகழ்ச்­சி­யொன்­றின்­போது பாடி ஆடிக்­கொண்­டி­ருந்த பாடகி எம்.ஐ.ஏ. நடு­ வி­ரலை உயர்த்திக் காண்­பித்­த­மையே இதற்குக் கார­ண­மாகும். அவ­ம­திப்­பான சைகை­யாக இது கரு­தப்­படும் நிலையில் பாடகி எம்.ஐ.ஏ.வின் இச்­செ­யற்­பாடு சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

தொலைக்­காட்­சியில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­கிக்­கொண்­டி­ருந்த இந்­நி­கழ்ச்­சியில் அவர் இப்­படி செய்­த­மையால் அவர் மீதான விமர்­ச­னங்கள் அதி­க­ரித்­தன.

இதற்­காக அமெ­ரிக்கா தேசிய கால்­பந்­தாட்ட லீக்கும் (என்.எவ்.எல்) என்.பி.சி. தோலைக்­காட்சி அலை­வ­ரி­சையும் ரசி­கர்­க­ளிடம் மன்­னிப்பு கோரின.

இந்­நி­லையில் 18 மாதங்­களின் எம்.ஐ.ஏ.விடம் 15 இலட்சம் டொலர்­களை நஷ்ட ஈடாக சுப்­பர்போல் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்கள் கோரினர். இந்த இந்த அப­ரா­தத்­துக்கு எதி­ராக எம்.ஐ.ஏ. சட்­ட­ரீ­தி­யாக போராடி வரு­கிறார்.

தற்­போது எம்.ஐ.ஏ.வின் நட­வ­டிக்­கை­யினால் தமது விளம்­பர வரு­மானம் குறை­வ­டைந்­த­தாக கூறி, மேலும் 1.51 கோடி டொலர்­களை எம்.ஐ.ஏ.விடம் சுப்­பர்போல் ஏற்­பாட்­டா­ளர்கள் கோரி­யுள்­ளனர். அதா­வது மொத்­த­மாக 1.66 கோடி டொலர்­களை (216.8கோடி ரூபா) அவர்கள் கோரி­யுள்­ளனர்.

இலங்­கையை சேர்ந்த பொறி­யி­ய­லா­ளரும் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாப­கர்­களில் ஒரு­வ­ரு­மான அருள்­பி­ர­கா­ஷத்தின் (அருளர்) மக­ளாக 1975 ஆம் ஆண்டு லண்­டனில் பிறந்­தவர் மாதாங்கி மாயா.

ஆவர் 6 மாத குழந்­தை­யாக இருந்­த­போது அவரின் குடும்­பத்­தினர் யாழ்ப்­பா­ணத்­துக்கு திரும்­பினர். 1986 இல் மாயா தனது தாயார் மற்றும் சகோ­த­ர­ருடன் மீண்டும் லண்­ட­னுக்குச் சென்றார்.

இசைத்­து­றையில் ஆர்வம் காட்­டிய அவர், 2000 ஆம் ஆண்டு எம்.ஐ.ஏ. என்ற பெயரில் இசைத்­துறை வாழ்க்­கைய அவர் ஆரம்­பித்தார். பாடகி, பாட­லா­சி­ரியர், புகைப்­ப­டக்­க­லைஞர், மொடல், என பல­து­றை­களில் ஈடு­ப­டுவர் இவர்.

எஎம்,ஐ.ஏ. ஏன்­பது அவரின் பெய­ரி­லுள்ள எழுத்­துக்­க­ளாகும். அதே­வேளை மிஸ்ஸிங் இன் அக் ஷன் என்­பதன் சுருக்­கமே எம்.ஐ.ஏ. இது­வெ­னவும் கூறப்­ப­டு­கி­றது.

2005 இல் வெளி­யான முத­லா­வது பாடல் அல்­பத்­துக்கு தந்­தையின் பெய­ரான அருளர் என பெய­ரிட்ட எம்.ஐ.ஏ. 2007 இல் வெளி­யிட்ட அல்­பத்­துக்கு ‘கலா’ என தனது தாயின் பெயரை சூட்­டினார். ஆவரின் ‘பேப்பர் பிளேன்’ என்ற பாடல் அவ­ருக்கு உலகளாகவிய புகழை பெற்றுக்கொடுத்தது.

பாடகர் பெஞ்சமின் புரொவ்மனை காதலித்த பாடகி எம்.ஐ.ஏ. 2009 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்றுக்கு தயானார். 2012 ஆம் ஆண்டு இத்தம்பதியினர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

mia

MIA_front_face

mia-001

mia-01

mia-02

mia-03

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படப்பிடிப்புக்கு தாமதம்: நயன்தாராவுடன் டைரக்டர் மோதல்?
Next post பெண் கழுத்து வெட்டிக் கொலை; கணவர் கைது